மதுரையில் சரிவர மூடப்படாமல் உள்ள பள்ளத்தில் வாகனங்கள் தடுமாறும் அபாயம்

மாநகராட்சி நிர்வாகம், தோண்டப்பட்டு சாலைகளை, துரிதமாக மூடுவதுடன், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;

Update: 2023-06-21 11:30 GMT

மதுரையில் பல இடங்களில் சரிவர மூடப்படாமல் உள்ள சாலைகளில் தேங்கியுள்ள  கழிவு நீர் 

மதுரை அண்ணாநகர், மேலமடை மருதுபாண்டியர் தெருவில் கழிவு நீர் கால்வாய் பராமரிப்புக்கு, மதுரை மாநகராட்சி யினர், பல இடங்களில்  தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் சாலைகளில் வெள்ளம் போல் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இவ்வழியாக தான், பொதுமக்கள் கோமதிபுரம், ஆறாவது மெயின் சாலைக்கு செல்ல வேண்டும்.சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்தால், பாதசாரிகள்,இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதியடைந்தனர்.

மதுரை மாநகராட்சியினர் ஒப்பந்தம் மூலம் இப் பணிகளை மேற்கொள்வதால், தோண்டிய பள்ளங்களை சரிவர மூடாமல், பணியாளர்கள் செல்வதாக இப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த பாதையை விரைவில் சீர் செய்யவில்லை என்றால், இரவு நேரங்களில் வருவோர் கடும் அவதியடைய வாய்ப்புள்ளதால், மதுரை மாநகராட்சி ஆணையாளர், தனி கவனம் செலுத்தி, சரிவர மூடப்படாமல் உள்ள சாலைகளை துரிதமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து ஜீவரத்தினம் கூறியது:மதுரை மாநகராட்சி நிர்வாகம், தோண்டப்பட்டு சாலைகளை, துரிதமாக மூடுவதுடன், சாலைகளை சீரமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News