மதுரை அருகே கணவர் தூக்கிட்டு தற்கொலை
மதுரையில் குண்டர் சட்டத்தில் மூன்று பேர் உள்பட மொத்தம் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்;
குடிபோதையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை செல்லூர் மீனாம்பாள் புரம் சத்தியமூர்த்தி நான்காவது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார் .இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது குடிபோதையில் நைலான் சேலையால் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி வீரலட்சுமி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் ராஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் கட்டிடப் பணியின் போது வயர்கள் திருட்டு:வாலிபர் கைது
மதுரை மார்ச் 26 மதுரை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தனியார் கட்டிட நிறுவனம் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிறுவணம் வேலைக்காக வைத்திருந்த வயர்கள் திருட்டு போய்விட்டன. இது குறித்து நிறுவனத்தின் கிளை மேலாளர் நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரவி 36 என்பவர் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அங்கு நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.பின்னர் இந்த திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பரளிபுதூரை சேர்ந்த களஞ்சியம் மகன் பிரகாஷ் 25 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
டிஆர்ஓ காலனி பஸ்ஸ்டாப்பில் அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி.
மதுரை திருப்பாலை பாரத் நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் நிசித்ராம் 21. இவர் சம்பவத்தன்று பைக் ஓட்டி சென்று கொண்டிருந்தார். இவர் நத்தம் மெயின் ரோடு டி.ஆர்.ஓ.காலனி பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் கட்டுப்பாட்டையிழந்து பைக் மீது மோதியது. இதில் பலமாக அடிபட்டு வாலிபர் நிசித்ராம் சம்பவ இடத்திலேயே பலியானார்.ஜ இந்த விபத்து குறித்து அவருடைய அண்ணன் தட்சிணாமூர்த்தி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் அரசு பஸ் டிரைவர் சாந்தி நகர் ரெயிலார் நகரை சேர்ந்த பால்பாண்டி 47 மீது வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணன் தம்பி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
மதுரை, ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனி அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மலையாளம் மகன் மணிராஜா 22. இவர் கொலைக்குற்ற வழக்கில் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தொடர்ந்து பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரது செயலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவின் பேரில் மணிராஜாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தம்பி கைது
ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனி அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மலையாளம் மகன் ஜீவமணி என்ற ஜீவ மணிகண்டன் 21. இவர் கொலை முயற்சி வழிப்பறி வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இவரையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவரது செயல்களை கட்டுப்படுத்துவதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவின் பேரில் ஜீவமணியையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ஜீவ மணி ,ராஜாவின் தம்பி ஆவார்.
கரிசல்குளம் வாலிபர் கைது
மதுரை வி. கரிசல்குளம் அண்ணாதெருவை சேர்ந்தவர் ராஜா மகன் ஜீவா20. இவரும் பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.இவரது குற்ற செயல்களையும் கட்டுப்படுத்தும் விதமாக போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் உத்தரவின் பேரில் ஜீவாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.