எத்தனை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தினாலும் சாலைகள் சரியில்லை

மதுரையில் எத்தனை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தாலும் சாலைகள் குண்டும் குழியும்தான் பொதுமக்கள் குமுறல்;

Update: 2023-04-13 10:30 GMT

பைல் படம்

மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தாலும், சாலைகள் குண்டும் குழியுமாகத்தான் இருப்பதாக  பொதுமக்கள்  வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை மாநகராட்சியின் சார்பில், மண்டலங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.இதில், மாநகராட்சியின் சொத்துவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்டவைகள் மனுக்கள், மேயர் மற்றும் ஆணையாளரால் பெறப்படுகிறது.இருந்தபோதிலும், மதுரை அண்ணாநகர், மேலமடை வீரவாஞ்சி தெரு, கோமதிபுரம், ஜூப்பிலி டவுன், சௌபாக்யா தெரு உள்ளிட்டவைகளில், சாலைகள் படு கேவலமாக உள்ளது.

இப் பகுதிகளில் பல நேரங்களில் சாக்கடை நீர் வீட்டின் வாசல்களில் சங்கமம் ஆகிறது.இது குறித்து, அப்பகுதி மக்கள் உதவிப் பொறியாளரிடம் புகார் அளித்தும் பலன் இல்லையாம்.மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்துவதுடன், மாநகராட்சி மேயர், ஆணையர், மக்கள் பிரச்னைகளையும் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த்  தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 18 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 6 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 1 மனுவும், வரிப் பிரிவினை வேண்டி 1 மனுவும், புதிய குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 1 மனுவும், சொத்துவரி, ஆக்கிரமிப்பு மற்றும் சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட இதர கோரிக்கைகள் வேண்டி 33 மனுக்களும், இதர மண்டலத்தைச் சார்ந்த 3 மனுக்களும் என மொத்தம் 63 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது.

இம்முகாமில், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் வரலெட்சுமி, செயற்பொறியாளர் திரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் தி.மகேஸ்வரன், உதவிப்செயற்பொறியாளர் (திட்டம்) காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவிப் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News