மதுரை நகரில் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை: மாநகராட்சி ஆணையாளர் தகவல்

ஒவ்வொரு குடிமகனும் சுதந்திர திருநாளை கொண்டாடும் விதமாக வருகின்ற 13.08.2022 முதல் 15.08.2022 வரை கொடி ஏற்ற வேண்டும்;

Update: 2022-08-11 08:30 GMT

பைல் படம்

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகள்தோறும் வருகின்ற 13.08.2022 முதல் 15.08.2022 வரை மூன்று நாட்கள் தேசியக் கொடி ஏற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங்.

இது தொடர்பாக மேலும் அவர் மேலும்  கூறியதாவது: சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு தமிழக அரசின் சார்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை மாநில அளவிலும், தேசிய அளவிலும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி ,மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக சுதந்திர திருநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடிமகனும் சுதந்திர திருநாளை கொண்டாட மற்றும் பங்கு கொள்ளும் விதமாக வருகின்ற 13.08.2022 முதல் 15.08.2022 மூன்று நாட்கள் குடிமக்களாகிய நாம் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு, மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதன்படி , மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் உள்ள அனைத்து வரி வசூல் மையங்கள், மண்டல அலுவலகங்கள், மைய அலுவலகம் ஆகிய இடங்களில் தேசியக்கொடியினை விற்பனை செய்வதற்கு மதுரை மாநகராட்சியின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 மண்டலத்திற்கு உட்பட்ட சிறப்பு இடங்களில் விற்பனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , மண்டலம் 1 க்கு உட்பட்ட 1) கோ.புதூர் பேருந்து நிலையம் 2)உத்தங்குடி (மீனாட்சி மிஷன் மருத்துவமனை அருகில்) 3)மேலமடை மாநகராட்சி வார்டு அலுவலகம் 4)மூன்றுமாவடி ரவுண்டானா (பெட்ரோல் பங்க் அருகில்) 5) யாதவர் மகளிர் கல்லூரி 6)வருமான வரி அலுவலகம், 7)பார்க் டவுண் பேருந்து நிலையம் 8)ஐயர் பங்களா சந்திப்பு 9)ஆனையூர் பேருந்து நிலையம் 10)வண்டியூர் தாகூர் பள்ளி 11) கண்ணனேந்தல் 12) ஆனையூர் பகுதி 13) புதூர் 14) பாண்டியன் நெடுஞ்செழியன் பள்ளி ஆகிய பகுதிகளிலும்,

மண்டலம் 2க்கு உட்பட்ட 1)வசந்தம் ஓட்டல் (நீதிமன்றம் அருகில்) 2)தந்தி அலுவலகம் அருகில் 3)அரசு இராசாசி மருத்துவமனை 4)அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் அருகில் 5)மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 6)நரிமேடு சென்ட்ரல் பள்ளி 7)சரஸ்வதி தியேட்டர் அருகில் 8)விஷால் தி மால் முன்புறம் 9)வக்புவாரிய கல்லூரி அருகில் 10)மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலும்,

மண்டலம் 3க்கு உட்பட்ட 1) பெரியார் பேருந்து நிலையம் அருகில் 2)ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் 3)சம்மட்டிபுரம் வரிவசூல் மையம் 4)ஜான்சிராணி பூங்கா அருகில் 5)மேலமாசி வீதி சந்திப்பு 6)போத்தீஸ் கடை அருகில் 7)பைபாஸ் ரோடு (லட்சுமி பவனம் அருகில்) 8)தெற்கு மாசி வீதி (மணி மருத்துவமனை) 9)ரெயின்போ (பைபாஸ் ரோடு அருகில்) 10) அரசரடி (பெட்ரோல் பங்க் அருகில்) ஆகிய பகுதிகளிலும்,

மண்டலம் 4க்கு உட்பட்ட சிறப்பு இடங்கள்: 1) விளக்குத்தூண் அருகில் 2) அரசரமரம் பிள்ளையார்கோவில் அருகில் 3)அம்மன் ஒட்டல் அருகில் 4)தெப்பக்குளம் காலபைரவர் கோவில் 5)முத்தீஸ்வரர் கோயில் அருகில் 6)கீழவெளிவீதி சந்திப்பு 7)பாண்டிய வேளாளர் தெரு 8)முனிச்சாலை சந்திப்பு 9)கீழ மாரட் வீதி 10)தெற்கு வாசல் சந்திப்பு ஆகிய பகுதிகளிலும்,

மண்டலம் 5க்கு உட்பட்ட 1) திருப்பரங்குன்றம் கோவில் வாசல், 2)திருநகர் 3வது பேருந்து நிறுத்தம் (ஜம்ஜம் அருகில்) 3) பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் 4)வில்லாபுரம் ஆர்ச் அருகில் 5)அவனியாபுரம் பெரியார் சிலை அருகில் 6)ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு ஜீவாநகர் சந்திப்பு 7)திருநகர் 3வது பேருந்து நிறுத்தம் (ஜம்ஜம் அருகில்) 8)ஹார்விப்பட்டி நுழைவுவாயில் 9)பைக்காரா சரவணா செல்வரத்தினம் கடைவாயில் 10) மூலக்கரை பேருந்து நிறுத்தம் (கோபால்சாமி கல்யாண மண்டபம் வாயில்) ஆகிய பகுதிகளில் மதுரை மாநகராட்சியின் சார்பில் தேசியக் கொடிகள் விற்பனை செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், கடைகள், மால்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பெரியஅளவிலான தேசியக்கொடியினை வைத்துக் கொள்வதுடன், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் தேசியக்கொடியினை தங்கள் நிறுவனத்தின் செலவில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் , சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா அனைத்து வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக அலுவலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் சுதந்திர திருவிழாவினை சிறப்பாக கொண்டாட தேசியக் கொடியினை வாங்கி தங்கள் வீடுகளில் ஏற்றி சுதந்திர திருநாள் அமுதத் திருவிழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News