மதுரை அருகே தீப்பிடித்து எரிந்த உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கார்
மதுரை அருகே உயர்நீதி மன்ற வழக்கறிஞரின் கார் தீ விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.;
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய வருபவர் நிர்மல் குமார். இவர் ,குடும்பத்துடன் புதூர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று இரவு பணி முடித்து நள்ளிரவு வீடு திரும்பிய போது, அவரது சொகுசு காரில் இருந்து புகை கிளம்பி உள்ளது .
உடனடியாக, காரை திறந்து இறங்க முயன்ற போது காரின் கதவுகள் திறக்கவில்லை. கடுமையான போராட்டத்திற்கு பின் கதவு திறக்கப்பட்டு இறங்கியவுடன் வாகன முழுவதும் தீ பரவியது. உடனடியாக , காவல் நிலையத்திற்கும் தல்லாகுளம் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வாகனத்தின் உள்புறம் முழுமையாக எரிந்து நாசமானது இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக அரசு வழக்கறிஞர் உயிர் தப்பினார்.