மதுரை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயிலின் சக்கரம் தடம் புரண்டு விபத்து.
மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயிலின் சக்கரம் தடம் புரண்டு விபத்து:
மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்திலிருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரயில் 3வது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த போது, திடீரென சரக்கு ரயிலின் மைய பகுதியில் உள்ள 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதனைத் தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளை மீட்டுக்கும் பணியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர்.
குறிப்பாக, நள்ளிரவில் நடைபெற்ற சம்பவம் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கபட்டது. இதனால், மூன்றாவது நடைமேடையில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதை படம் எடுக்க சென்ற புகைப்படக்காரர்களிடம் மதுரை ஆர்.பி.எப் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டதுடன், காமிராக்களையும் போட்டோ எடுக்க விடாமல் தட்டி விட்டதாகவும் தெரிகிறது.