மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தர்ணா
பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தர்ணா போராட்டம் நடத்தினார்.;
பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மதுரை மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் ஏராளமான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் மேலூர் 56 கிராம கால்வாய் ஆகியவற்றுக்கு தண்ணீர் திறக்க கோரி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர் .இதனால், சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில், கள்ளந்திரி பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர் 56 கிராம கால்வாய் ஆகியவற்றுக்கு பாசன வசதிகள் மேற்கொள்ள தமிழக அரசு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், இதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என, என்றும் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கட்சி நிர்வாகிகள் சென்று, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து அவரிடம் மனு அளித்தார்.
மேலும் திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து கோஷமிட்டபடி தர்ணாவிலும் ஈடுபட்டனர்.