மதுரை நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது;

Update: 2021-12-05 07:30 GMT

மதுரை நீதிமன்றம் அருகேயுள்ள ஜெயலலிதா உருவச்சிலைக்கு மரியாதை செய்த அதிமுகவினர்

மதுரை நகரில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது உருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட துணைச் செயலர் வில்லாபுரம் ராஜா, மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் எம்.எஸ். பாண்டியன், மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை, முன்னாள் மேயர் திரவியம், எம்ஜிஆர் மன்ற நகர செயலர் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 

Tags:    

Similar News