மதுரை அருகே மின்மாற்றியில் திடீர் தீ விபத்து : பரபரப்பு..!

மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயில் அருகே மின்மாற்றியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-04-06 14:44 GMT

மின்மாற்றியில் ஏற்பட்ட தீவிபத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு 

மின்மாற்றியில் திடீர் தீ விபத்து விரைந்து வந்து அனைத்து தீயணைப்பு துறையினர்:

மதுரை:

மதுரையில், பிரதான சாலையான சிம்மக்கல் அருகே செல்லத்தம்மன் கோவில் உள்ளது.

செல்லத்தம்மன் கோயில் அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. மின்மாற்றியில  திடீரென  தீப்பற்றி எரியத் தொடங்கியது. புகையாகத் தொடங்கிய நெருப்பு காற்று வீசியதால் பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது.  மேலும், மின்மாற்றிக்கு ஊற்றக்கூடிய  ஆயிலும் கொட்டி கிடந்ததாக கூறப்படுகிறது.

ஆயிலும் இருந்ததால்  மின் மாற்றி திடீரென வெடித்து மளமளவென தீப்பற்றி எரியாத தொடங்கியது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள், உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரிந்து வந்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிக அளவு லாரி ஷெட்டுகள் உள்ள பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தீ விபத்து குறித்து, திலகர் திடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News