மதுரையில் கல்லூரி வளாகத்தில் தீ விபத்து
மதுரை கே.கே.நகர் வக்பு வாரிய கல்லுாரி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.;
மதுரை கே.கே.நகர் வக்பு வாரிய கல்லுாரி வளாகத்தில், தீ விபத்து ஏற்பட்டது. இக்கல்லுாரி 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இளைஞர் சிலர் அவ்வப்போது சென்று நடமாடுவதும், புகைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதியே கரும்புகையாக காட்சி அளித்தது. மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். கல்லுாரி நுழைவாயில் வழியாக தீயணைப்பு வாகனம் நுழைய முடியாததால் தீயை அணைக்கும் பணியில், முதலில் தொய்வு ஏற்பட்டது. இது குறித்து, தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.