மதுரை அருகே தீ விபத்தில் நான்கு கார்கள் சேதம்

மதுரை உத்தங்குடி அருகே தீ விபத்தில் நான்கு கார்கள் எரிந்து சேதமடைந்தன.;

Update: 2022-03-05 04:15 GMT

கார் பழுது பார்க்கும் கடையில்  தீ விபத்து ஏற்பட்டது. 

மதுரை உத்தங்குடி பாண்டி கோவில் ரிங் ரோட்டில் அமைந்துள்ள தனியார் கார் பழுது நீக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த காவலாளி தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 2 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்,  5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் நான்கிற்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின.

இச்சம்பவம் குறித்து, மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தெரிய வருகிறது.

Tags:    

Similar News