மதுரை எல்லீஸ் நகரில் அன்னதானத்தை தொடக்கி வைத்த நிதி அமைச்சர்
மதுரை மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பாக இந்த அன்னதான விழா நடைபெற்றது;
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், எல்லீஸ் நகர் வாகன காப்பகத்தில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக நடைபெற்ற அன்னதான விழாவை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். திருக் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, சேவா சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், பரவை பேரூராட்சி முன்னாள் தலைவர் மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.