மதுரையில் கண்தான விழிப்புணர்வு பேரணி
தலைமை மருத்துவ அதிகாரி பத்திரிநாராயணன் பங்கேற்று பேரணியை கொடி அசைத்து தொடக்கி வைத்தார்;
மதுரை ஆரப்பாளையம் பகுதியில், உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியானது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி, பைபாஸ் சாலை வரை நடைபெற்றது.
இவ்விழாவில், முதன்மை விருந்தினராக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். பத்திரி நாராயணன், பங்கேற்று பேரணியை கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
உலகம் முழுவதும் 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற் றோர் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர் இதில், 26 விழுக்காடு குழந்தைகள். 75 சதவீதம் பார்வை இழப்பைத் தடுக்கக் கூடியதாகும். போதிய கண் தானம் செய்வோர்கள் இல்லாமையால் இதை குறைக்க முடியவில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது.
சிறப்புத் தகவல்கள்: ஒரு வயது முதல், அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம்.கண்கள் மாற்று அறுவை செய்ய 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையே ஆகும்.கண் தானம் செய்ய விரும்புவோர், அருகில் உள்ள கண் வங்கியில் பதிவு செய்யலாம். கண் தானம் செய்தவர் இறந்ததும், உடனடியாக அவரது கண்களை மூடி, ஐஸ் அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும். உலகிலேயே இலங்கை நாடுதான் கண் தானம் செய்வதில் முதலிடம் வகிக்கிறது.
நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்., 8 வரை, தேசிய கண்தான அரைத் திங்கள் நிகழ்வாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில், அதிக கண்தானம் பெற்ற வங்கிகளில் இரண்டாமிடத்தில் அகர்வால்ஸ் மருத்துவமனை உள்ளது.
இந்நிகழ்வில் , மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன், கிளை மேலாளர் இராஜபாண்டியன், டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள், அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி மாணவர்கள் 150 நபர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.பேரணியில், கண்தானம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை, மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நிர்வாகிகள் செய்திருந்தனர்.