மதுரை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் படம் திறப்பு
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் உருவப் படம் திறக்கப்பட்டது.;
பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் திருவுருவப்படத்தினை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் உருவப் படம் திறக்கப்பட்டது.
மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும் முதுபெரும் வழக்கறிஞருமான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் திருவுருவப்படத்தினை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், ருக்மணி பழனிவேல்ராஜன், முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம், வழக்கறிஞர் சங்கத்தலைவர் நெடுஞ்செழியன், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் கணேசன் மற்றும் மதுரை மேயர் இந்திரணி, முன்னாள் மேயர் குழந்தை வேலு, முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.