தேர்தல் வெற்றி: மதுரையில் இனிப்பு வழங்கி காெண்டாடிய பாஜக வழக்கறிஞர்கள்
5 மாநில தேர்தல் வெற்றியை முன்னிட்டு மதுரை நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி காெண்டாடினர்.;
நீதிமன்ற வளாகத்தில் இனிப்பு வழங்கிய பாஜக வழக்கறிஞர் அணியினர்.
வட மாநிலங்களான உத்திரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்திரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அமாேக வெற்றி பெற்றது. இதனை பாஜக தாெண்டர்கள் நாடு முழுவதும் காெண்டாடி வருகின்றனர்.
அதேபோல் பாஜகவின் வட மாநில தேர்தல் வெற்றியை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர்கள் சார்பில் இனிப்பு வழங்கி காெண்டாடினர். முன்னதாக, தேர்தல் வெற்றியை சக வழக்கறிஞர்களுக்கு இனிப்பு வழங்கி, மகிழ்ச்சிய பகிர்ந்து கொண்டனர்.