மதுரை மாநகராட்சியில் அதிக இடங்களில் வென்றது திமுக கூட்டணி

மதுரை மாநகராட்சியில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வென்று அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது

Update: 2022-02-22 17:00 GMT

மதுரை மாநகராட்சி 5- வந்து வார்டு திமுக வேட்பாளர் வாசுகி சுகுமாறன் வெற்றி பெற்றார்.

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 81பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திமுக சார்பில் 67 வேட்பாளர்களும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 5 வேட்பாளர்களும் சிபிஎம் சார்பில் 4 வேட்பாளர்களும் மதிமுக சார்பில் 3 வேட்பாளர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 1 வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் அடங்குவர்.அதிமுக சார்பில் 15 வேட்பாளர்கள், பாஜக சார்பில் ஒரு வேட்பாளரும் சுயேட்சை வேட்பாளர்கள் மூவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News