மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தேர்தல் பார்வையாளர் கமல் கிஷோர் ஆகியோர் ஆய்வு.

Update: 2022-02-08 14:16 GMT

மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தேர்தல் பார்வையாளர் கமல் கிஷோர் ஆகியோர் இன்று ஆய்வு மேற்காெண்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் / ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், மதுரை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கமல் கிஷோர், ஆகியோர் ஆய்வு:

மதுரை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் 2022 வாக்குச் எண்ணிக்கை மையங்களில், தேர்தல் நடத்தும் அலுவலர்/ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், மதுரை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கமல் கிஷோர், ஆகியோர் இன்று  ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று 26.01.2022 அறிவிப்பு வெளியிடப்பட்டது. எதிர்வரும், 19.02.2022 அன்று வாக்கு பதிவு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது கோவிட் 19 பெருந்தொற்று தொடர்பான நிலையான வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்திட தமிழ்நாடுமாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் ஆண்கள் 6,59,472 பெண்கள் 6,83,099 மூன்றாம் பாலினத்தவர் 143 என மொத்தம் 13,42,714 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1317 என உள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குகள் எண்ணுவதற்கு மண்டலம் 1 பகுதிகளுக்கு பாத்திமா கல்லூரி, மண்டலம் 2 பகுதிகளுக்கு வக்புவாரிய கல்லூரி, மண்டலம் 3 பகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் (மகளிர்) கல்லூரி, மண்டலம் 4 பகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் (ஆண்கள்) கல்லூரி ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர்/ ஆணையாளர் மற்றும் மதுரை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆகியோர் மேற்கண்ட நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் அறை, பாதுகாப்பு அறை, கண்காணிப்பு கேமிரா வசதி, தடுப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், மண்டல அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், வாக்குசாவடி அலுவலர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News