மதுரையில் அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
இலங்கைக்கு தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ள அரிசி மூட்டைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்;
இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள அரிசி மூட்டைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியவாசிய பொருட்களான அரிசி மற்றும் மருந்து பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவித்தார்கள். அதன்படி ,மதுரை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் முலமாக இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அரிசி அனுப்பபட உள்ளது. இலங்கைக்கு அனுப்பட உள்ள அரிசியின் தரம் மற்றும் எடையினை, மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அரிசி ஆலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் ஆய்வு செய்தார்.