கருப்பாயூரணியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கலந்துரையாடல்
மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பாயூரணி ஊராட்சியில், கால்நடை துறை சார்பில் பொதுமக்கள் கலந்துரையாடல் முகாம் நடைபெற்றது.
கருப்பாயூரணி ஊராட்சியில், கால்நடை துறை சார்பில் பொதுமக்கள் கலந்துரையாடல் முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடைத்துறை இணை இயக்குநர் நடராஜன், உதவி இயக்குநர் சரவணன், கருப்பாயூரணி மருத்துவர் தீனா மோனிஷா, மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பொது மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் ஆடுகளை எவ்வாறு பராமரிப்பது, தரம் பிரித்து எவ்வாறு வாங்குவது மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் நோய் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆடுகளுக்கு, வழங்கப்படும் தீவனம், அடர் தீவன உணவு வகைகள், ஆடுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் போன்றவை பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
இம் முகாமில், கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தமிழக அரசின் ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகள் கலந்துகொண்டனர்.