மதுரையில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2024-03-11 10:42 GMT

மதுரையில் ,மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையில் மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களின் பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு கணக்கிட வேண்டும், மின் ஊழியர்களின் மற்றும் ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் நடவடிக்கையை உடனே தடுக்க வேண்டும், மின்வாரியத்தில் அரசாணை 6 மற்றும் 7 ஐ ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியம் வழங்கும் அரசு நிபந்தனையற்ற உத்தரவாத்துடன் கூடிய, ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர் மாரிசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆர் பால்ராஜ், மாவட்ட இணைச் செயலாளர்கள் பி. சுந்தர்ராஜன், பி சுப்பையா, மாவட்ட துணைத் தலைவர் கே. ஜீவானந்தம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

அரசு அனைத்து துறை ஓய்வு பெற்றோர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. பாலமுருகன், அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற நலமைப்பு மாநில துணை பொதுச் செயலாளர் தேவராஜ், மின்வாரிய ஓய்வு பெற்ற அமைப்பின் மாநில துணை பொதுச் செயலர் பிச்சை ராஜன் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். மாவட்ட துணைத் தலைவர் பி ரத்தினம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News