மதுரை வைகை நதியில் எரிந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு
மதுரை வைகையாற்றில், எரிந்த நிலையில் சடலம் கண்டெடுப்பட்டது; போலீசார் விசாரிக்கின்றனர்.;

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அற்றங்கரை பகுதியில், அடையாளம் தெரியாத 25 மதிக்கத்தக்க மர்ம நபரின் உடல் எரிந்த நிலையில் கிடைத்துள்ளதாக, மதுரை கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, சடலத்தை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இளைஞரை சில மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு இங்கு கொண்டு வந்து பிரேதத்தை எரிப்பதற்கு முயற்சி செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. தொடர்ந்து இறந்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.