மதுரை பாண்டி கோயில் ரிங் ரோடு தடுப்பில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிப்பு

விபத்துக்குக் காரணமான, கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்;

Update: 2021-11-27 16:30 GMT

மதுரை பாண்டிகோயில் அருகே விபத்தில் சிக்கி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய  லாரி

மதுரை பாண்டி கோயில் ரிங் ரோட்டில் தடுப்பில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை பாண்டி கோயில் ரிங் ரோடு பாலம் வேலை நடைபெற்று வருகிறது . இந்த நிலையில், பாண்டி கோயில் ரவுண்டானாவில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஒரு வழி சாலையில், மேம்பாலம் முடியும் இடத்தில் தடுப்பு சுவரில் கண்டெய்னர் லாரி மோதியது. அதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல வழியின்றி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வந்து வாகனங்களை மாற்றுப்பாதையில்  அனுப்பி வைத்து, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதற்கு  விபத்துக்குக் காரணமான, கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News