மதுரையில் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு
மதுரையில் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.;
கலந்தாய்வில் பணி உயர்வு / இட மாறுதல் பெற்ற ஆசிரியர் ஒருவர்.
மதுரை மாவட்டம், பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகளின்படி , பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு/ஊராட்சி/நகராட்சி/ உயர்நிலை/மேல்நிலை/தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்/பதவி உயர்வு/ பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.
அதன்படி, 24.01.2022 முதல் 23.02.2022 வரை மதுரை ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 22 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு பணி இடமாறுதல், பதவி உயர்வுக்கான ஆணையை பெற்றனர்.