எரிவாயு தகனமேடை பராமரிக்க விண்ணப்பிக்கலாம்: மதுரை மாநகராட்சி அறிவிப்பு
மதுரை மாநகராட்சி பொது சுகாதார பிரிவு எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணிக்கு விண்ணப்பிக்க மாநகராட்சி அழைப்பு;
மதுரை மாநகராட்சி பொது சுகாதார பிரிவு தத்தநேரி நவீன எரிவாயு தகன மேடை உயிரி எரிவாயு மையம் மற்றும் மூலக்கரை மின் தகன மையம் யூனிட் ஆகியவற்றை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளை மூன்று வருடத்திற்கு மேல் மேற்கொள்வதற்கு தகுதிவாய்ந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி படிவத்தினை பூர்த்தி செய்து எதிர்வரும் 29. 11. 2021 .மாலை 3 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாநகர நல அலுவலர் பிரிவு, மதுரை மாநகராட்சி இரண்டாம் தளம், அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை -என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆணையாளர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்