மதுரை மாநகராட்சி பகுதிகளில் வாக்குச் சாவடி மையங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளின் மக்கள் வாக்களிக்க மொத்தம் 1317 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

Update: 2022-02-02 01:30 GMT

மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் - ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல்  வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்- ஆணையாளர்  கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று 26.01.2022 அறிவிப்பு வெளியிடப் பட்டது. எதிர்வரும் 19.02.2022 அன்று வாக்கு பதிவு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது, கோவிட் பெருந்தொற்று தொடர்பான நிலையான வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் ஆண்கள் 6,59,472 பெண்கள் 6,83,099 மூன்றாம் பாலினத்தவர் 143 என மொத்தம் 13,42,714 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1317 என உள்ளது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1 பகுதிகளுக்கு உட்பட்டு 319 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அதில் மகபூப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 7, சம்மட்டிபுரம் பிள்ளைமார் மேனிலைப்பள்ளி 12, விராட்டிபத்து கல்லுமலை குருநாத வித்யா சாலை பள்ளி 6, ஆனையூர் முடக்காத்தான் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 8, கோச்சடை புனித ஜான் மெட்ரிக்குலேசன் பள்ளி 18 ஆகிய இடங்களில் உள்ள 51 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் - ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.

வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, சி.சி.டி.வி. வசதி, சாய்வுதளம் மற்றும் குடிநீர், கழிப்பட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில், மண்டல அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், வாக்குசாவடி அலுவலர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News