வாடிப்பட்டி; தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம்
வாடிப்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
வாடிப்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மதுரை மேற்கு மாவட்ட தலைவர் கச்சைகட்டி பாண்டி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பொதும்பு செல்வம் சீனிவாசன், பழனி குமார்,மாவட்ட நிர்வாகிகள் கராத்தே சிவா, சரந்தாங்கி சடையன் முத்து காமாட்சி முத்து பவுன்ராஜ் குமார் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் பால சரவணன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், முன்னாள் எம்பி உடையப்பன் ஆகியோர் புதியஉறுப்பினர்களுக் கான அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினா்.
இதில் வட்டாரத் தலைவர்கள் ரமேஷ்,சமயநல்லூர் பாலகிருஷ்ணன், செல்லம்பட்டி தேசிங்குராஜா,நிர்வாகிகள் எல் ஐ சி முத்துப்பாண்டி, ராஜேந்திரன் ராஜா, கருப்பட்டி ஆர் பாண்டி அலங்காநல்லூர் வினோத் நாகமலை ஹரி, ராமன் பட்டி பாலா சிங்கராஜ் ராஜபாண்டி ராஜா சந்திரசேகர் ராஜாங்கம் அருணாச்சலம் வக்கீல் முருகவேல் சுப்புராஜ் பழனி கண்ணன் பிரபாகரன், இளைஞர் அணி குமார்,மாணவரணி சூர்யா மகளிர் அணி காவேரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்வட்டார தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.