கல்லூரி மாணவர் மணிகண்டன் விஷமருந்தி இறந்துள்ளார்: போலீஸ் கூடுதல் டிஜிபி
இளைஞரின் உயிரிழப்பு குறித்து எந்த விவரங்களும் தெரியமால் தகவல்களை பதிவிட வேண்டாம் என கூறினார்;
கல்லூரி மாணவர் மணிகண்டன் விஷமருந்தி இறந்துள்ளார்: போலீஸ் கூடுதல் டிஜிபி தகவல்:
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் இளைஞர் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார் என்பது, உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக ஆதரமற்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றார் ஏடிஜிபி தாமரைக்கண்ணன்.
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குனர் தாமரைக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, நீர்கோழியந்தல் கிராமத்தை சேர்ந்த இளைஞர் மணிகண்டன் ஓட்டிவந்த வாகனம் தொடர்பாக சந்தேகம் எழுந்த நிலையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை முடிந்து வீட்டிற்கு அவரது தாயுடன் அனுப்பபட்டார். உயர்நீதிமன்ற உத்தரவுபடி, மணிகண்டனி்ன் உடல்கூராய்வு நடத்தப்பட்டு ஆய்வறிக்கை சமர்பித்துள்ளோம்.
உடற்கூராய்வு முடிவில், மணிகண்டனின் உடலில் எந்த காயமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் அருந்திய விஷபாட்டில் மணிகண்டனின் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில், காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.மணிகண்டனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் குறித்து விசாரணை நடத்திவருகிறோம்
இளைஞரின் உயிரிழப்பு குறித்து எந்த விவரங்களும் தெரியமால் தகவல்களை பதிவிட வேண்டாம் என கூறினார். இதில், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக், தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.