மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்களுக்கு 'சோதனை'
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளிக்க வந்தவர்களிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாரம்தோறும், திங்கள் கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு, ஏராளமான பொதுமக்கள் மனுக்களை வந்து மாவட்ட ஆட்சியர் வழங்குகின்றனர்.
இதில், ஒரு சிலர் கையில் கெரசின் கேனை, மறைவாக எடுத்து வந்து, தங்கள் பிரச்சனைக்கு தீர்வு தேவை என்று கூறி, ஆட்சியர் அலுவலக வாசலில் தீக்குளிக்க முயல்கின்றனர். இதனால், அடிக்கடி பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.
இதை தடுக்கும் நோக்குடன், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார், மனு கொடுக்க வரும் நபர்களையும், அவர்கள் ஓட்டி வரும் வாகனங்களையும், சோதனைக்கு பிறகே ஆட்சி அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.