தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்: மதுரையில் 850 டன் குப்பை தேக்கம்

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையின்றி வேலை நிறத்தப் போராட்டத்தால் சாலைகளில் 850 டன் குப்பைகள் தேக்கம்

Update: 2022-05-30 07:51 GMT

மதுரை மாநகராட்சியில் 4,500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் & 1,500 க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், தூய்மை பணி மற்றும் குடிநீர் விநியோகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், மதுரை மேலவாசலில் உள்ள தூய்மை பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் போராட்டம் நடந்தது.

28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் என 3 சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், தினக்கூலி தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும் , விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடைபெறுகிறது. இதனால்  சாலைகளில் 850 டன் அளவில் குப்பைகள் தேக்கமடைந்து உள்ளது,  வாகன ஓட்டிகள்,பொது  மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News