மதுரையில் 35 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
கஞ்சா கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த ஹரிகுமார், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஈஸ்வரன் ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்;
மதுரையிவ் போலீஸாரால் பறிமுதல் செய்ப்பட்ட போதை பொருளான கஞ்சா
மதுரை கரிமேடு பகுதியில் சந்தேகப்படும் வகையில் காரில் சுற்றித்திரிந்த நபர்களை காவல்துறையினர் தடுத்து சோதனை செய்தனர். அப்போது, காரில் 35 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த ஹரிகுமார், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஈஸ்வரன் ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து கரிமேடு காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.