சாலையோரம் தங்கியுள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள் போர்வை வழங்கல்
மதுரையில், சாலையோரம் தங்கியுள்ளவர்களுக்கு ஐ.ஆர்.சி.டி அமைப்பின் சார்பில் போர்வை வழங்கப்பட்டது.;
உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு, ஐ.ஆர்.சி.டி. அமைப்பின் சார்பாக, போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்வகையில், மதுரை இரயில் நிலையம், மேலவெளி வீதியில் சாலையோரம் தங்கியுள்ள வீடற்ற ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி முதன்மை மருத்துவ அதிகாரி ராஜா, கரூர் தொழிலதிபர் இராஜேந்திரன் மற்றும் மதுரை சமூக ஆர்வலர் முனைவர் இராமச்சந்திரன் மற்றும் மகாத்மா காந்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் ஆகியோர் பங்கு பெற்று வழங்கினர்.