பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு
ஆதாரமற்ற பதிவை நீக்கி அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார்;
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது மதுரை வழக்கறிஞர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
மதுரை எஸ். எஸ். காலனி, வடக்கு வாசலை சேர்ந்தவர் வழக்கறிஞர் சுமேஷ் . இவர் ,உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் .இவர், மதுரை காவல் ஆணையாளரிடம் அளித்துள்ள புகார் மனு விவரம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சோசியல் மீடியாவில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் குறித்து, ஆதாரமற்ற வகையில் பேசியுள்ளார்.
இவர் பேச்சை கேட்ட குமார் என்ற தொழிலதிபர் தமிழகத்தில் தொழில் தொடங்க திட்டமிட்டு இருந்த நிலையில், தனது முடிவை மாற்றி தெலங்கானாவில் தொழில் செய்யப் போவதாக கூறியுள்ளார். இவரது பேச்சு தமிழகத்தின் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவரது ஆதாரமற்ற பதிவை நீக்கி அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.