மதுரை கோயிலில் ஆட்டுக்குட்டியை பலி கொடுத்து பாஜகவினர் நூதனப் போராட்டம்
ஆட்டிற்கு காங்கிரஸ் எனப் பெயரிட்ட பாஜகவினர் அந்த ஆட்டை கோயிலில் வெட்டி விருந்து படைத்தனர்;
மதுரை பாண்டிகோயிலில் ஆட்டை வெட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
காங்கிரஸ் கட்சி பெயர் வைத்து கோயிலில் ஆடு வெட்டி விருந்து வைத்து பாஜகவினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் பாரத பிரதமர் மோடிக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லையென பாஜக வினர் மதுரையில் நூதனப் போராட்டத்தை நடத்தினர். மதுரை ரிங் ரோட்டில் பாண்டிகோயிலில், பாஜக வினர் பாண்டி முனீஸ்வரருக்கு ஆட்டை வெட்டி காணிக்கையாக அளித்தனர். அந்த ஆட்டிற்கு பாஜகவினர் காங்கிரஸ் எனப் பெயரிட்டு, ஆட்டை வெட்டி விருந்தை படைத்தனர்.இந்த நூதனப் போராட்டத்தை அக்கம் பக்கத்தினர் வியப்புடன் பார்த்தனர்.