மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாஜக ஆர்ப்பாட்டம்

சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்;

Update: 2023-05-09 01:15 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

மதுரையில் சித்திரை திருவிழாவில், அழகர் இறங்கும் போது கூட்ட நெரிசலில்,இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு நிதி வழங்க கோரியும், சித்திரைத் திருவிழா அரசாணை வெளியிடக் கோரியும், மதுரை மாவட்ட பாஜகவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை சித்திரை திருவிழாவை பார்க்க வந்தவர் கூட்ட நெரிசலில் சிக்கிய  பக்தர்கள்  ஆழ்வார்புரம் தடுப்பணையில் மூழ்கி இறந்த  நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கெனவே சித்திரை திருவிழாவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது உள்பட  நான்கு பேர் சித்திரை திருவிழா நெரிசலில் சிக்கி  உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மதுரை மாவட்டம் பாஜக நிர்வாகி மகா சுசீந்திரன் தலைமை வகித்தார்.ஊடகப் பிரிவு நிர்வாகி ரவிச்சந்திரன் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பல்வேறு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டமானது, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து பாஐக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால், சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதை அடுத்து, சித்திரை திருவிழாவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரி பாஜக நிர்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News