மதுரையில் சொத்துவரி உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
மதுரையில் சொத்துவரி உயர்வைக் கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
தமிழக அரசு உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி, மதுரையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்திலுள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், சொத்து வரி உயர்வை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இதனைக் கண்டித்து மதுரை மாவட்ட பாஜக.,வினர், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசே சொத்து வரி உயர்வை திரும்பப் பெறு, திரும்பப் பெறு என கோஷமிட்டனர்.