மதுரை வைகை ஆற்றில் ஆனந்தக் குளியலாடும் பறவைகள்

புதிதாக கட்டப்பட்ட சிம்மக்கல் வைகை ஆற்றில் பறவைகள் நீச்சல் அடித்துக் கொண்டு உல்லாசமாக சுற்றி வருகின்றன;

Update: 2021-11-25 09:30 GMT

மதுரை வைகை ஆற்றில் உல்லாசமாக குளியலாடும் பறவைகள் கூட்டம்

வைகையில் பறவைகள் உல்லாசமாக  குளியல் ஆடும் காட்சி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், வைகை நதியில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. வைகை நதியில், மதுரை கோரிப்பாளையத்தில், தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுவதால், பறவைகள் ஆனந்தமாக உல்லாச குளியலில் ஈடுபட்டுள்ளன. வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை வழியாக வைகை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட சிம்மக்கல் வைகை ஆற்றில் பறவைகள் நீச்சல் அடித்துக் கொண்டு உல்லாசமாக சுற்றி வருகின்றன. இதை பார்த்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News