மதுரையில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பல்வேறு தரப்பினர் கண்டனம்

மதுரை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் இன்று பட்ஜெட் தாக்கலுக்கான கூட்டத்துக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

Update: 2022-05-12 05:00 GMT

பைல் படம்

மதுரை மாநகராட்சியில் பட்ஜெட் கொண்டிருக்கும்போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது முதலில் மாநகராட்சி பட்ஜெட் கூட்டமானது மேயர் இந்திராணி பொன்வசந்தம் தலைமையில் ஆணையாளர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக பத்திரிக்கையாளர்களை திமுகவை சேர்ந்த சிலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை க்கண்டித்து, பத்திரிக்கையாளர்கள் மேயரை அறை முன் குவிந்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, போலீசார் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தினர். இதை, மதுரையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பத்திரிகைகள் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் - தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மதுரை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் இன்று பட்ஜெட் தாக்கலுக்கான கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற மதுரை பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மாமன்றத்திற்கு சற்றும் தொடர்பில்லாத நபர்களால், குறிப்பாக திமுகவைச் சார்ந்தவர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

மாமன்ற அவையில் அதிமுக உறுப்பினர்களுக்கு சீட் ஒதுக்கீடு குறித்து, அக்கட்சியினர் மேயரிடம் முறையிடச் சென்ற செய்தியை சேகரிக்கச் சென்றவர்களுக்கு ஆளும் திமுகவைச் சேர்ந்த சில நபர்களால் ஊடகவியலாளர்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

மக்களாட்சியின் மாண்பைச் சிதைக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர் மற்றும் ஜனநாயகத்தை நம்பும் கட்சிகளும் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர்களைத் தாக்கிய நபர்கள் மீது திமுக உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், மாமன்ற அவைக்குத் தொடர்பில்லாத நபர்களின் தேவையற்ற தலையீட்டை உடனடியாகத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டுமாய் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு, கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்கிறது.

அதேபோன்று, மாமன்ற அவைக்கூட்ட நிகழ்ச்சிகளைப்பதிவு செய்வதற்கான பத்திரிகையாளர்களின் கடமையை முறையாக ஆற்றுவதற்கும் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் வழிவகை செய்ய வேண்டும் எனவும் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

Tags:    

Similar News