மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அஷ்டமி திருவிழா: பக்தர்கள் தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று நடைபெறும் அஷ்டமி திருவிழா பிரசித்தி பெற்றது.

Update: 2021-12-27 07:44 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில், சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை முத்தாய்ப்பானது.

இன்று சுந்தரேசுவரர்-பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை அடைவர்.

இதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால், அள்ள அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கையாகும்.

Tags:    

Similar News