மதுரையில் ஆயுதப் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை காவலர்களுக்கான விளையாட்டு அணியில் இருந்தவர். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்;

Update: 2021-11-12 15:00 GMT

தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படையில் காவலர் கார்த்திக் 

ஆயுத படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் கார்த்திக் (30). என்பவர் மதுரையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையின் நான்காவது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வரும் கார்த்திக், தற்போது சென்னை காவலர்களுக்கான விளையாட்டு அணியில் உள்ளார். இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், விடுமுறைக்காக மதுரை ஆரப்பாளையம் கண்மாய்க்கரை தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த கார்த்திக், வீட்டில் இருந்தபோது சாப்பிட வரவில்லை என, அவரது தம்பி பிரவீண், அழைக்க சென்றார். அப்போது கார்த்திக் தன்னுடைய படுக்கையறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. நீண்ட நாட்களாகவே கார்த்திக் மற்றும் அவரது மனைவி நிஷா இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆரப்பாளையம் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News