மதுரையில் அனைத்து வங்கிகள்- வாடிக்கையாளர்கள் தொடர்பு நிகழ்ச்சி

மதுரையில் நடந்த அனைத்து வங்கிகள்- வாடிக்கையாளர்கள் தொடர்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.;

Update: 2021-10-27 10:25 GMT
மதுரையில் நடந்த வங்கி வாடிக்கையாளர் தொடர்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி. பழனிவேல் தியாகராஜன் பயனாளி ஒருவருக்கு கடனுதவி வழங்கினார்.

மதுரை மாவட்ட முன்னோடி வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து வங்கி வடிக்கையாளர் தொடர்பு சிறப்பு நிகழ்ச்சி புதனன்று மதுரை மடீட்சியா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் துவக்கி வைத்து உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி. பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கா. ப. கார்த்திகேயன், மாவட்ட திட்ட இயக்குநர் அபிதா ஹனிஃப், கனரா வங்கி பொது மேலாளர் டி.சுரேந்திரன், பாரத் வங்கி பொது மேலாளர் அமித் வர்மா மற்றும் மண்டல வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் பயனாளர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. வங்கி வடிக்கையாளர்களுக்கான வங்கி சேவை குறித்த ஸ்டால்கள் திறந்து வைக்கப்பட்டது.

Tags:    

Similar News