மதுரை அருகே அலங்காநல்லூர் காளியம்மன் ஆலய விழா
Alanaganallur Temple Function அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னோட்டமாக காளியம்மன் கோவில் மார்கழி மாத உற்சவ விழா சிறப்பாக நடந்தது.;
Alanaganallur Temple புன்ச்டின்
மாதங்களில் அவள் மார்கழி என்று சொல்வதைப்போல் தமிழ் மாதமான மார்கழி பிறந்துவிட்டாலே அம்மன் கோயில் அனைத்தும் களை கட்ட ஆரம்பித்துவிடும். தமிழகம் முழுவதும் ஆன்மீக நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பல்வேறு பஜனை கோஷ்டிகள் சார்பில் பஜனைகளும் நடக்கும்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழாவின் முன்னோட்ட நிகழ்வாக, அங்குள்ள காளியம்மன் கோவில் மார்கழி மாத உற்சவ விழா நடைபெற்றது.
கடந்த 12ஆம் தேதி காப்புக் கட்டுதளுடன் தொடங்கியது.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு மங்கள இசை முழங்க பொங்கல் வைத்து அங்குள்ள சாத்தியார் ஆற்று கரையில் இருந்து கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, இரவு முழுவதும் மூன்று கால பூஜை உடன் மாவிளக்குஎடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், கரும்புத்தொட்டி. 18 அடி நீள வேல் குத்துதல் மற்றும் 21 அக்னி சட்டிகளை ஒரே நேரத்தில் எடுத்து வந்து பக்தர்கள் பரவசத்துடன் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றது.
இன்று உச்சிகால பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. உலகப் புகழ்பெற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு 21 நாட்களுக்கு முன்பாக பல நூற்றாண்டுகளாக தொன்று தொட்டு அலங்காநல்லூர் காளியம்மன் கோவில் மார்கழி மாத உற்சவ திருவிழா நடைபெறுகிறது. பாரம்பரிய வழக்கப்படி, அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி, காளியம்மன், முத்தாலம்மன், அய்யனார் கருப்புசாமி கோவில்களின் வழிபாட்டு விழாவாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலை துறை தக்கார் அங்கயற்கண்ணி, செயல் அலுவலர் இளமதி மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக செய்யப்பட்டிருந்தது.