திமுக அரசைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திமுக அரசைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
மதுரையில், செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாடம்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்தும், திமுக அரசு பழிவாங்குவதாகக் குற்றம் சாட்டியும், மதுரையில் நகர் மாவட்ட அதிமுகவினர், இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். திமுக அரசின் அராஜக போக்கு, அடக்குமுறை, பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து, மதுரை அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர் மாவட்ட துணைத் தலைவர் அண்ணாதுரை, பொருளாளர் வில்லாபுரம் ராஜா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பாண்டியன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.