மதுரையில் ஆதி சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
மதுரையில் ஆதி சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா;
மதுரை ஆதிசந்தனமாரியம்மன் கோவில் விழாவில் பெண்கள் பால்குடம் எடுத்து சென்றனர்.
மதுரை திடீர்நகர் ஸ்ரீ ஆதி சந்தன மாரியம்மன் திருக்கோயில் பங்குனி விழா மிக சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக, அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை , ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.