முதல் ரசிகர் மன்றம் அமைத்த மறைந்த ரசிகரின் மனைவிக்கு நடிகர் ரஜினி ஆறுதல்
தனக்கு முதன்முதலாக மதுரையில் மன்றம் அமைத்த ரசிகரின் மறைவையொட்டி அவர மனைவியிடம் நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்;
தனக்கு முதன்முதலாக மதுரையில் மன்றம் அமைத்த ரசிகரின் மறைவையொட்டி அவர மனைவியிடம் நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.
மதுரையில் நடிகர் ரஜினிகாந்துக்கு, முதலில் மன்றம் அமைத்த ரசிகர் முத்துமணி அண்மையில் உயிரிழந்தார். இதை கேள்வியுற்ற நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகரின் மனைவியிடம் போனில் ஆறுதல் கூறினார். மதுரையைச் சேர்ந்த முத்துமணி. இவர், திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்க்கு, மதுரையில் முதன் முதலில் மன்றம் அமைத்தார்.அத்துடன், ரசிகர் முத்துமணிக்கு, சென்னையில் ரஜினி வீட்டில் திருமணம் நடந்ததாம்.ரசிகர் முத்துமணி, கடந்த சில நாள்களாக நோய்வாய்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். அவர் இறந்த செய்தி கேள்விபட்டதும், நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசியில் ரசிகர் முத்துமணியின் மனைவி லெட்சுமியிடம், தொலைபேசி மூலம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.