பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்தினர்;

Update: 2023-12-03 04:45 GMT

பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில், குடும்பத்துடன் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309. -ன்படி தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து,7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர் ஆசிரியர் மற்றும் பொதுத் துறை நிறுவனத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திடவும், சிபிஎஸ். திட்டத்தில், பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வலியுறுத்தியும், உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டம் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பாக, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக முன்பு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமையில், குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடந்த்து.

இதில், பார்த்தசாரதி அ.இ.தலைவர் இந்த குடும்பத்துடன் பட்டினி போராட்டத்தை தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அனைத்து நிர்வாகிகள் மற்றும் ஆண்கள் பெண்கள் இந்த குடும்பத்தோட பட்டினி போராட்டம் பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News