மதுரை அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: கிரைம் செய்திகள்..
மதுரை தெப்பக்குளம் பகுதியில், மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.;
பைல் படம்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில், மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
தெப்பக்குளம் சி.எம்.ஆர். ரோட்டு பகுதியை சேர்ந்தவர் 27. வயது இளம்பெண். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். பெற்றோர் இல்லாத நிலையில் சகோதரருடன் இருந்து வந்தார் .
சகோதரர் வேலைக்கு சென்ற நிலையில், இவர் தனியாக இருப்பதை அறிந்த திரவிய மகன் கார்த்திக் என்ற இளைஞர் அந்த பெண்ணை பலவந்தவமாக கற்பழித்துள்ளார். இந்த சம்பவம் அடிக்கடி நடந்துள்ளது. இதை அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை:
மதுரை , திருப்பரங்குன்றம் கூடல் மலை தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து 31. சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, அண்ணன் ஜான் பீட்டர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார், வழக்குப் பதிவு செய்து, வாலிபர் சவரிமுத்துவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹீலியம் பலூன் விற்பனை: வியாபாரி கைது:
மதுரை, தல்லாகுளம் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக ஹீலியம் கேஸ் நிறைந்த பலூன் விற்பனை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர் .
வில்லாபுரம் அன்பு நகரை சேர்ந்தவர் சம்சுதீன் பாபு 47 .இவர் பலூன் வியாபாரி ஆவார்.இவர் வர் கேஸ் அடைத்து பலூன்கள் விற்பனை செய்து வந்தார். தல்லாகுளம் பகுதியில் பழைய நத்தம் ரோடு விஸ்வநாதர்புரத்தில் ஹீலியம் கேஸ் நிரப்பி பலூன் விற்பனை செய்து வந்தார் .இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதனால் தல்லாகுளம் போலீசார் அவரை கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
வீடு புகுந்து நகை பணம் திருட்டு: இருவர் கைது
மதுரை, பெத்தானியாபுரத்தில் வீடு புகுந்து நகை பணம் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு முருகன் மகன் மனைவி ரோஸி விக்டோரியா 40. சம்பவத்தன்று இவரது வீடு புகுந்த ஆசாமிகள் வீட்டில் இருந்த மூன்று பவுன் தங்கச்செயின், ரூ 3ஆயிரத்தை திருடிச்சென்றுவிட்டனர் .இந்த திருட்டு குறித்து ரோஸிவிக்டோரியா கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்வீட்டில் திருடிய திருட்டு ஆசாமிகளை தேடி வந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் இவர் வீட்டில் திருடிய மேலமடை ஆசாரி தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் ராஜா சிக்கந்தர் 20 ,சுந்தரராஜன் பட்டி ராமச்சந்திராபுரம் பாண்டியராஜன் மகன் ஆகாஷ் 19, கார்த்திக் என்ற மௌலி கார்த்திக் மூவரும் திருடியது தெரிய வந்தது. போலீசார் ராஜா சிக்கந்தர் 20 ஆகாஷ் 19 இருவரையும் கைது செய்தனர். கார்த்திக் என்ற மௌலி கார்த்திகை தேடி வருகின்றனர்.