பரவை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் 569 மனுக்கள் அளிப்பு
பரவை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் 569 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மதுரை அருகே, பரவை பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாமின் 569 மனுக்கள் பெறப்பட்டது.
மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜா தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைச் செயலாளர் மூவேந்திரன், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஆர்.கே. ஜெயராமன், பேரூர் செயலாளர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் (பொறுப்பு) ஜெயலட்சுமி வரவேற்றார்.
இந்த முகாமை, மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தொடக்கி வைத்தார். இந்த முகாமில், கவுன்சிலர்கள் செளந்தரபாண்டியன், கீதா செந்தில், ராமேஷ்பாண்டி, வின்சி, செவத்தியம்மாள், பகவதி ஆறுமுகம், நாகேஸ்வரி கிருஷ்ண திலகர், திருநாவுகரசி திருப்பதி, லதா பால சுப்பிரமணி, மீனாட்சி ஜெயராமன், அன்புசெல்வன், சரவணன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கை தொடர்பான 569 மனுக்களை கொடுத்தனர். முகாமினை, பேரூராட்சி உதவி இயக்குனர் சு. சேதுராமன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முடிவில் பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டியில் ஐயப்பன் கோயில் மண்டல பூஜை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் ஐயப்பன் கோவிலில் 36வது மண்டல பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இந்த பூஜையினைகுருநாதர்கள் துரைராஜ், பாண்டி மற்றும் முருகன் பூசாரி செய்தனர். மதியம் 12 மணிக்கு நடந்த அன்னதான நிகழ்ச்சிக்கு, சென்ட்ரல் பேங்க் மேனேஜர் சிவக்குமார் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். ஆசிரியர் ஆசை கண்ணன் முன்னிலையும் வகித்தார்.
மாலை 6 மணிக்கு மின்விளக்கு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்பன் புலி வாகனத்தில் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்து அடைந்தார். இதன் ஏற்பாடுகளை, நிர்வாகிகள் கலைவாணன், கண்ணன் சக்திவேல், சுரேஷ் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.