மதுரையில் கம்பத்தில் கார் மோதி எரிந்து சேதம்: 4 பேருக்கு காயம்
மதுரையில் கார் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 4 பேருக்கு காயமடைந்தனர்.;
மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் வழியாக நள்ளிரவில் வந்து கொண்டிருந்த கார் அதிக வேகத்துடன் சேதுபதி பள்ளி அருகேயுள்ள டிராபிக் சிக்னல் கம்பத்தில் மோதி அருகில் பூட்டி இருந்த செல்போன் கடையில் இடித்து விபத்துக்குள்ளானது.
இதனால் காரில் பயணத்தில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து கார் மோதிய விபத்தில் காரில் ஏற்பட்ட தீயானது மளமளவென பரவி முற்றிலுமாக எரிய துவங்கியுள்ளதால் மதுரை டவுன் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமை வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதனைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபர் தபால்தந்தி நகரை சேர்ந்த சுகன் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவம் குறித்து திடீர்நகர் போக்குவரத்து துறை புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.