மதுரை மாநகர புதிய போலீஸ் ஆணையாளர் பதவி ஏற்பு
மதுரை மாநகர் காவல் ஆணையராக செந்தில்குமார் பதவி ஏற்றுக்கொண்டார்;
மதுரை காவல் ஆணையராக பதவி ஏற்றுக்கொண்ட டி.செந்தில்குமார்.
மதுரை மாநகர புதிய காவல் ஆணையராக செந்தில்குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.
மதுரை காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா வடக்கு மண்டல ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டார்.மேலும், அவருக்கு பதிலாக மதுரை புதிய காவல் ஆணையராக சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு ஆணையராக இருந்த டி.செந்தில்குமார் மதுரை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ,இன்று மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் டி.செந்தில்குமார் மாநகர ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் பொறுப்பு ஏற்புக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.முன்னதாக, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை காவல் ஆணையர் செந்தில்குமார் ஏற்றுக்கொண்டார்.காவல் ஆணையரின் பதவியேற்பு நிகழ்ச்சியில், மதுரை மாநகர காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார்.மதுரை மாநகர உதவி ஆணையராக 2010-11ம் ஆண்டு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.