நாளை சோமவார பிரதோஷ விழா: முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வர அறிவுறுத்தல்

நாளை ஆலயங்களில் சோமவார பிரதோஷ விழா நடைபெற உள்ளதால், பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வர வலியுறுத்தியுள்ளனர்.;

Update: 2021-10-03 15:09 GMT

மதுரை மாவட்டத்தில், திருவேடகம் ஏடகநாத சுவாமி, தென்கரை மூலநாதர், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயம், மதுரை அண்ணாநகர் மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர், ஆவின் பால விநாயகர் ஆகிய கோயில்களில், சோமவார பிரதோஷத்தையொட்டி, சிவன் மீனாட்சிக்கு பக்தர்களால் அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெறவுள்ளது.

பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News